நல்லாட்சிக் கட்சி
முகப்பு / பொறுப்புகள்

மக்கள் பணிப் பொறுப்புகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் 11 பிரிவுகளில் 65 பொறுப்புகள். இவை பதவிகள் அல்ல; மக்களுக்கான பணிகள். ஒவ்வொன்றுக்கும் தெளிவான கடமைகளும் முதல் 90 நாள் இலக்கும் உண்டு.

ஊதியமில்லாத் தன்னார்வப் பணி

உங்கள் நேரத்துக்கும் திறமைக்கும் ஏற்ப ஒன்றோ இரண்டோ பொறுப்புகளை ஏற்கலாம். ஒவ்வொரு 90 நாட்களுக்கும் பணி மதிப்பாய்வு.

யார் ஏற்கலாம்

18 வயது நிரம்பிய எந்த இந்தியக் குடிமகனும். சாதி, மதம் கேட்கப்படாது. அரசு, பொதுத்துறை, அரசு உதவி பெறும் பள்ளிப் பணியாளர்கள் பணி விதிகளின்படி கட்சியில் சேர முடியாது; ஓய்வுபெற்றவர்களை வரவேற்கிறோம்.

எப்படி ஏற்பது

ஒரு பொறுப்பைத் தட்டித் திறந்து, வாட்ஸ்அப் பொத்தானை அழுத்துங்கள். முதலில் உறுப்பினராக இணையுங்கள்.

பணியே தகுதி

இங்கு செய்யும் வேலை களப்பணிப் பதிவேட்டில் பதிவாகும். கட்சிப் பதவிக்கும் வேட்பாளர் தேர்வுக்கும் அதுவே தகுதி.

பசுமை – சுற்றுச்சூழல்

Environment, 8 பொறுப்புகள்
தாமிரபரணி ஆற்றுக் காவலர்Thamirabarani River Guardianதிறந்துள்ளது

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு, குப்பை, மணல் கொள்ளை ஆகியவற்றைக் கண்காணித்து, ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் கொண்டு செல்பவர்.

பணிகள்
  • மாதம் ஒருமுறை ஆற்றங்கரைப் பகுதிகளைப் புகைப்படம், இருப்பிடத்துடன் ஆய்வு செய்தல்.
  • கழிவுநீர் கலக்கும் இடங்கள், குப்பை கொட்டும் இடங்களின் பதிவேடு பராமரித்தல்.
  • மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத் துறை, வருவாய்த் துறைக்கு மனு அனுப்பிப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் பின்னணி; ஆற்றங்கரை ஊர்களில் வசிப்பவர்.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: தொகுதிக்குள் ஆற்றின் 10 பிரச்சினை இடங்களின் புகைப்பட அறிக்கை.
குளம் & கால்வாய் மீட்புப் பொறுப்பாளர்Tanks & Channels Restoration Leadதிறந்துள்ளது

ஊர்க் குளங்கள், பாசனக் கால்வாய்களின் ஆக்கிரமிப்பையும் தூர்வாரல் தேவையையும் கண்டறிந்து மீட்புக்குப் பணியாற்றுபவர்.

பணிகள்
  • தொகுதியின் குளங்கள், கால்வாய்களின் பட்டியல் (பரப்பு, நீர் நிலை, ஆக்கிரமிப்பு) தயாரித்தல்.
  • தூர்வாரல், கரை பலப்படுத்தல் கோரிக்கைகளைக் கிராம சபையிலும் நீர்வளத் துறையிலும் முன்வைத்தல்.
  • விவசாயிகள், நீரைப் பயன்படுத்துவோர் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
யார் பொருத்தம்: விவசாயம், பொறியியல் அல்லது நில அளவைப் பின்னணி.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 குளங்களின் நிலை அறிக்கை.
மேற்குத் தொடர்ச்சி மலை & வனப் பாதுகாப்புப் பொறுப்பாளர்Western Ghats & Forest Protection Leadதிறந்துள்ளது

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மலையடிவாரப் பகுதிகளின் இயற்கை வளத்தைக் காக்கப் பணியாற்றுபவர்.

பணிகள்
  • மலையடிவாரத்தில் சட்டவிரோதக் குவாரி, மரம் வெட்டுதல், கட்டுமானங்களைப் பதிவு செய்து புகார் அளித்தல்.
  • வனத் துறையுடன் தொடர்பில் இருந்து, காட்டுத் தீ, வனப் பாதுகாப்புத் தகவல்களை மக்களுக்குப் பகிர்தல்.
  • பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
யார் பொருத்தம்: வனவியல், உயிரியல் பின்னணி அல்லது இயற்கை ஆர்வம்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: மலையடிவார ஊர்களின் சுற்றுச்சூழல் பிரச்சினைப் பட்டியல்.
மனித–வனவிலங்கு மோதல் தடுப்புப் பொறுப்பாளர்Human–Wildlife Conflict Leadதிறந்துள்ளது

யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதால் ஏற்படும் இழப்புகளுக்குத் தீர்வும் இழப்பீடும் பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • பயிர், கால்நடை, வீட்டுச் சேதங்களின் பதிவேடு பராமரித்தல்.
  • வனத் துறை இழப்பீட்டு விண்ணப்பங்களுக்கு விவசாயிகளுக்கு உதவுதல்.
  • தடுப்பு வேலி, எச்சரிக்கை அமைப்பு போன்ற தீர்வுகளுக்குக் கோரிக்கை வைத்தல்.
யார் பொருத்தம்: மலையடிவார ஊர்களைச் சேர்ந்தவர்; விவசாயிகளுடன் நல்ல தொடர்பு.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியலும் இழப்பீட்டு நிலையும்.
சீமைக் கருவேல ஒழிப்பு & மரம் நடுதல் பொறுப்பாளர்Invasive Tree Removal & Planting Leadதிறந்துள்ளது

நிலத்தடி நீரைக் குறைக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, நாட்டு மரங்களை நட்டுப் பராமரிப்பவர்.

பணிகள்
  • சீமைக் கருவேலம் அடர்ந்த பொது இடங்களைக் கண்டறிந்து, அகற்ற உள்ளாட்சியிடம் கோருதல்.
  • பள்ளிகள், இளைஞர் மன்றங்களுடன் இணைந்து நாட்டு மரக்கன்றுகள் நடுதல்.
  • நட்ட ஒவ்வொரு மரத்தின் கணக்கையும் பராமரிப்பு நிலையையும் வெளியிடுதல்.
யார் பொருத்தம்: யார் வேண்டுமானாலும்; தோட்டக்கலை ஆர்வம் உதவும்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 500 நாட்டு மரக்கன்றுகள் நட்டு, பராமரிப்புப் பட்டியல்.
குப்பை மேலாண்மை & நெகிழி இல்லா ஊர்ப் பொறுப்பாளர்Waste & Plastic-free Leadதிறந்துள்ளது

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குப்பை சேகரிப்பு, பிரித்தல், அகற்றுதல் சரியாக நடக்கிறதா என்று கண்காணிப்பவர்.

பணிகள்
  • குப்பை குவியும் இடங்களின் வரைபடம் தயாரித்தல்.
  • மக்கும், மக்காத குப்பை பிரித்தல் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு.
  • உள்ளாட்சியின் சுகாதாரப் பிரிவிடம் புகார் அளித்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: யார் வேண்டுமானாலும்; நகர்ப்புற வார்டுகளில் வசிப்பவர் முன்னுரிமை.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 வார்டுகள் அல்லது ஊர்களின் குப்பைப் பிரச்சினை வரைபடம்.
குடிநீர்த் தரக் காவலர்Drinking Water Quality Guardianதிறந்துள்ளது

ஊர்களின் குடிநீரைப் பரிசோதித்து, முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்பவர்.

பணிகள்
  • அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்தல்.
  • முடிவுகளை ஊர் மக்களுக்கும் உள்ளாட்சிக்கும் வெளியிடுதல்.
  • கலங்கல் நீர், குழாய் உடைப்புப் புகார்களைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: வேதியியல், அறிவியல் அல்லது சுகாதாரப் பின்னணி.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 ஊர்களின் குடிநீர்ப் பரிசோதனை அறிக்கை.
பேரிடர் தயார்நிலைப் பொறுப்பாளர்Disaster Preparedness Leadதிறந்துள்ளது

2023 டிசம்பர் வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது மக்களைக் காக்கத் தன்னார்வலர் குழுவைத் தயார் செய்பவர்.

பணிகள்
  • வெள்ள அபாயப் பகுதிகள், பாதுகாப்பான தங்குமிடங்களின் பட்டியல் தயாரித்தல்.
  • ஊர்தோறும் மீட்புத் தன்னார்வலர் குழுவும் அவசரத் தொடர்பு எண் பட்டியலும் அமைத்தல்.
  • பேரிடர் காலத்தில் உணவு, மருந்து, நிவாரண விநியோகத்தை ஒருங்கிணைத்தல்.
யார் பொருத்தம்: NCC, தீயணைப்பு, மருத்துவம் அல்லது முதலுதவி அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம் (பேரிடரின்போது அதிகம்)முதல் 90 நாள் இலக்கு: தொகுதியின் வெள்ள அபாய வரைபடமும் 50 தன்னார்வலர் பட்டியலும்.

விவசாயம்

Farmers, 5 பொறுப்புகள்
விவசாயிகள் நலப் பொறுப்பாளர்Farmers' Welfare Leadதிறந்துள்ளது

விவசாயிகளின் பயிர்க் காப்பீடு, இழப்பீடு, உரம், கூட்டுறவுக் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுபவர்.

பணிகள்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்தல்.
  • பயிர்க் காப்பீடு, இழப்பீட்டு விண்ணப்பங்களுக்கு உதவுதல்.
  • உரம், விதைத் தட்டுப்பாடுகளைப் பதிவு செய்து வேளாண் துறையிடம் கொண்டு செல்லுதல்.
யார் பொருத்தம்: விவசாயி அல்லது வேளாண் பட்டதாரி.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 விவசாயிகளின் பிரச்சினைப் பதிவேடும் தீர்வு நிலையும்.
பாசன நீர்ப் பங்கீட்டுப் பொறுப்பாளர்Irrigation Water Leadதிறந்துள்ளது

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை சென்று சேர்கிறதா என்று கண்காணிப்பவர்.

பணிகள்
  • அணை நீர்த் திறப்பு அறிவிப்புகளை விவசாயிகளுக்கு உடனுக்குடன் பகிர்தல்.
  • கடைமடைப் பகுதிகளில் நீர் சேராத பிரச்சினைகளைப் பதிவு செய்தல்.
  • நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கைகளைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: பாசனப் பகுதி விவசாயி அல்லது பொறியியல் பின்னணி.நேரம்: வாரம் 2–3 மணி நேரம் (பருவ காலத்தில் அதிகம்)முதல் 90 நாள் இலக்கு: கால்வாய் வாரியான கடைமடைப் பிரச்சினை அறிக்கை.
இயற்கை வேளாண்மை & விதை வங்கிப் பொறுப்பாளர்Organic Farming & Seed Bank Leadதிறந்துள்ளது

நாட்டு விதைகளைச் சேமித்துப் பகிர்ந்து, இயற்கை வேளாண்மைப் பயிற்சி அளிப்பவர்.

பணிகள்
  • நாட்டு நெல், காய்கறி விதைகளின் விதை வங்கி அமைத்தல்.
  • இயற்கை உரம், பூச்சிவிரட்டி தயாரிப்புப் பயிற்சி நடத்துதல்.
  • வேளாண் அறிவியல் நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்துதல்.
யார் பொருத்தம்: இயற்கை விவசாயி அல்லது வேளாண் பட்டதாரி.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 விவசாயிகளுடன் விதை வங்கி தொடக்கம்.
விளைபொருள் விற்பனை & உழவர் சந்தைப் பொறுப்பாளர்Farm Produce Marketing Leadதிறந்துள்ளது

விவசாயிகள் இடைத்தரகர் இன்றி நியாய விலை பெற உழவர் சந்தை, விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் இணைப்பவர்.

பணிகள்
  • உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் விலை விவரங்களைப் பகிர்தல்.
  • விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) அமைக்க உதவுதல்.
  • இணைய வழி விற்பனை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல்.
யார் பொருத்தம்: வணிகம் அல்லது வேளாண் வணிகப் பின்னணி.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: ஒரு விவசாயிகள் குழுவை உழவர் சந்தையுடன் இணைத்தல்.
கால்நடை & பால் உற்பத்தியாளர் நலப் பொறுப்பாளர்Livestock & Dairy Leadதிறந்துள்ளது

கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்களின் மருத்துவம், காப்பீடு, கூட்டுறவுப் பிரச்சினைகளைக் கவனிப்பவர்.

பணிகள்
  • கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தக் கோருதல்.
  • கால்நடைக் காப்பீடு, அரசு மானியத் திட்டங்களுக்கு உதவுதல்.
  • பால் கூட்டுறவுச் சங்கங்களின் கொள்முதல் விலை, பணம் தாமதம் குறித்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: கால்நடை மருத்துவம் அல்லது பால் கூட்டுறவு அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: ஒரு கால்நடை மருத்துவ முகாம்.

வளர்ச்சி & அடிப்படை வசதிகள்

Development & Basic Amenities, 9 பொறுப்புகள்
சாலைப் பொறுப்பாளர்Roads Leadதிறந்துள்ளது

தொகுதியின் பழுதான சாலைகளைப் பட்டியலிட்டு, சீரமைப்புக்குப் பணியாற்றுபவர்.

பணிகள்
  • பழுதான சாலைகளின் புகைப்படம், இருப்பிடத்துடன் பதிவேடு.
  • நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு மனு அளித்துப் பின்தொடர்தல்.
  • புதிய சாலைப் பணிகளின் தரத்தைக் கண்காணித்தல்.
யார் பொருத்தம்: சிவில் பொறியியல் பின்னணி முன்னுரிமை.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 25 பழுதான சாலைகளின் பட்டியலும் மனு நிலையும்.
பேருந்து வசதிப் பொறுப்பாளர்Bus Services Leadதிறந்துள்ளது

பேருந்து வசதி இல்லாத ஊர்களுக்கும், பள்ளி-கல்லூரி நேரங்களுக்கும் பேருந்து பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • பேருந்து இல்லாத ஊர்கள், நேரப் பிரச்சினைகளின் பட்டியல்.
  • மாணவர்கள், பெண்கள், முதியோரின் பயணச் சிரமங்களைக் கணக்கெடுத்தல்.
  • அரசுப் போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கை வைத்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: யார் வேண்டுமானாலும்; கல்லூரி மாணவர்களுக்கு ஏற்றது.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 ஊர்களுக்கான பேருந்துக் கோரிக்கை மனு.
குடிநீர் விநியோகப் பொறுப்பாளர்Drinking Water Supply Leadதிறந்துள்ளது

ஒவ்வொரு தெருவுக்கும் சீரான குடிநீர் கிடைக்கிறதா என்று கண்காணிப்பவர்.

பணிகள்
  • குடிநீர் வராத தெருக்கள், உடைந்த குழாய்களின் பட்டியல்.
  • வீட்டுக் குழாய் இணைப்புத் திட்டங்களின் நிலையைக் கண்காணித்தல்.
  • குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சியிடம் புகார் அளித்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: யார் வேண்டுமானாலும்; பொறியியல் பின்னணி உதவும்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 ஊர்களின் குடிநீர்ப் பிரச்சினைப் பட்டியல்.
மின்சாரம், தெருவிளக்கு & சூரிய மின் பொறுப்பாளர்Power, Street Lights & Solar Leadதிறந்துள்ளது

மின் தடை, தெருவிளக்குப் பழுது, வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டங்களைக் கவனிப்பவர்.

பணிகள்
  • எரியாத தெருவிளக்குகள், அடிக்கடி மின் தடை உள்ள பகுதிகளின் பட்டியல்.
  • மின்வாரியத்திடம் புகார் அளித்துப் பின்தொடர்தல்.
  • வீட்டுக் கூரை சூரிய மின் மானியம் குறித்து விழிப்புணர்வும் விண்ணப்ப உதவியும்.
யார் பொருத்தம்: மின் பொறியியல் அல்லது எலக்ட்ரீஷியன் அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 100 எரியாத தெருவிளக்குகளின் பட்டியலும் சீரமைப்பு நிலையும்.
வீட்டுவசதி & பட்டா உதவிப் பொறுப்பாளர்Housing & Land Title Help Leadதிறந்துள்ளது

வீடு இல்லாதவர்களுக்கு அரசு வீட்டுவசதித் திட்டங்களும் இலவச வீட்டுமனைப் பட்டாவும் பெற்றுத் தர உதவுபவர்.

பணிகள்
  • வீடு, பட்டா இல்லாத குடும்பங்களின் பட்டியல்.
  • அரசு வீட்டுவசதித் திட்ட விண்ணப்பங்களுக்கு உதவுதல்.
  • வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மனுக்களைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: வருவாய்த் துறை நடைமுறை அறிந்தவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 30 குடும்பங்களின் விண்ணப்பங்கள்.
கழிவுநீர் & வடிகால் பொறுப்பாளர்Drainage & Sanitation Leadதிறந்துள்ளது

தெருக்களில் தேங்கும் கழிவுநீர், அடைப்பு, பொதுக் கழிப்பறைப் பிரச்சினைகளைக் கவனிப்பவர்.

பணிகள்
  • கழிவுநீர் தேங்கும் தெருக்களின் பட்டியலும் புகைப்படமும்.
  • பொதுக் கழிப்பறைகளின் நிலை ஆய்வு.
  • உள்ளாட்சியிடம் புகார் அளித்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: யார் வேண்டுமானாலும்; சுகாதாரப் பணி அனுபவம் உதவும்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 தெருக்களின் வடிகால் பிரச்சினை அறிக்கை.
பொதுப்பணித் தர ஆய்வாளர்Public Works Quality Auditorதிறந்துள்ளது

அரசுப் பணிகள் ஒப்பந்தப்படி, தரத்துடன் நடக்கின்றனவா என்று ஆவணப்படுத்துபவர்.

பணிகள்
  • நடக்கும் பணிகளின் மதிப்பீடு, ஒப்பந்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறுதல்.
  • பணி நடக்கும்போதும் முடிந்த பின்பும் புகைப்பட ஆவணம்.
  • தரக் குறைபாடுகளை ஆதாரத்துடன் புகாராக அளித்தல்.
யார் பொருத்தம்: சிவில் பொறியியல் அல்லது கட்டுமான அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 பணிகளின் தர அறிக்கை.
அரசுத் திட்ட வழிகாட்டிGovernment Schemes Guideதிறந்துள்ளது

முதியோர் ஓய்வூதியம், மகளிர் உதவித்தொகை, குடும்ப அட்டை போன்ற அரசுத் திட்டங்களைத் தகுதியானவர்களுக்குப் பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • தகுதியிருந்தும் பலன் பெறாதவர்களைக் கண்டறிதல்.
  • விண்ணப்பம் நிரப்புதல், ஆவணங்கள் சேகரிப்பில் உதவுதல்.
  • ஒவ்வொரு விண்ணப்பத்தின் நிலையையும் பதிவேட்டில் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: அரசுத் திட்டங்கள் அறிந்தவர்; பொறுமையாகப் பேசுபவர்.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 பேருக்கு விண்ணப்ப உதவி.
ஊரக வேலை உறுதித் திட்டக் கண்காணிப்பாளர்Rural Employment Watchதிறந்துள்ளது

100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை, வேலை நாட்கள், ஊதியம் சரியாகக் கிடைக்கிறதா என்று கண்காணிப்பவர்.

பணிகள்
  • வேலை அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்ப உதவி.
  • ஊதியத் தாமதம், வேலை மறுப்புப் புகார்களைப் பதிவு செய்தல்.
  • சமூகத் தணிக்கைக் கூட்டங்களில் பங்கேற்று உண்மை நிலையை முன்வைத்தல்.
யார் பொருத்தம்: ஊரக வளர்ச்சி நடைமுறை அறிந்தவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 3 ஊராட்சிகளின் வேலைத் திட்ட நிலை அறிக்கை.

மக்கள் கணக்கு & நல்லாட்சி

People's Accounts & Good Governance, 6 பொறுப்புகள்
ஊராட்சி பட்ஜெட் விளக்குநர்Panchayat Budget Explainerதிறந்துள்ளது

ஊராட்சியின் வரவு-செலவுக் கணக்கை மக்களுக்குப் புரியும் தமிழில் விளக்குபவர்.

பணிகள்
  • ஊராட்சியின் ஆண்டு வரவு-செலவு, திட்ட ஒதுக்கீடுகளைப் பெறுதல்.
  • எளிய தமிழில் ஒரு பக்க விளக்கம் தயாரித்து ஊரில் பகிர்தல்.
  • கிராம சபையில் கேள்விகளை முன்வைக்க மக்களுக்கு உதவுதல்.
யார் பொருத்தம்: வணிகவியல் அல்லது கணக்கியல் பின்னணி.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 3 ஊராட்சிகளின் எளிய பட்ஜெட் விளக்கம்.
நகராட்சி & பேரூராட்சி கணக்குக் கண்காணிப்பாளர்Town Accounts Watchதிறந்துள்ளது

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளின் வரவு-செலவையும் மன்றத் தீர்மானங்களையும் கண்காணிப்பவர்.

பணிகள்
  • மன்றக் கூட்டத் தீர்மானங்கள், பட்ஜெட்டைப் பெற்று ஆய்வு செய்தல்.
  • வார்டு வாரியான செலவுகளை மக்களுக்கு வெளியிடுதல்.
  • முறைகேடுகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் உறுதி செய்தல்.
யார் பொருத்தம்: கணக்கியல், தணிக்கை அல்லது நகராட்சி நடைமுறை அறிந்தவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: ஒரு நகராட்சியின் ஆண்டுச் செலவு விளக்க அறிக்கை.
தகவல் அறியும் உரிமைப் பொறுப்பாளர்Right to Information (RTI) Leadதிறந்துள்ளது

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுத் தகவல்களைப் பெற மக்களுக்கும் கட்சிக்கும் உதவுபவர்.

பணிகள்
  • தகவல் அறியும் உரிமை மனு எழுதுதல் பயிற்சி நடத்துதல்.
  • அனுப்பிய ஒவ்வொரு மனுவின் பதிவேடும் காலக்கெடுவும் பராமரித்தல்.
  • பதில் கிடைக்காதபோது மேல்முறையீடு செய்தல்.
யார் பொருத்தம்: சட்டம் அல்லது நிர்வாகப் பின்னணி; நுணுக்கமாக எழுதுபவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 மனுக்களும் அவற்றின் பதில் பதிவேடும்.
கிராம சபைக் காவலர்Grama Sabha Watchதிறந்துள்ளது

கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாகப் பதிவாவதை உறுதி செய்பவர்.

பணிகள்
  • கிராம சபைக் கூட்ட நாட்களை ஊர் மக்களுக்கு முன்கூட்டியே அறிவித்தல்.
  • மக்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வத் தீர்மானமாகத் தயாரித்தல்.
  • நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் செயலாக்கத்தைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: ஊர் மக்களிடம் நன்கு அறிமுகமானவர்.நேரம்: மாதம் 4–6 மணி நேரம்; கிராம சபை நாட்களில் முழு நாள்முதல் 90 நாள் இலக்கு: 5 ஊராட்சிகளின் கிராம சபையில் மக்கள் கோரிக்கைத் தீர்மானங்கள்.
வார்டு & பகுதி சபைப் பொறுப்பாளர்Ward & Area Sabha Leadதிறந்துள்ளது

நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் நடக்கும் வார்டு, பகுதி சபைகளில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்பவர்.

பணிகள்
  • வார்டு மக்களுக்குக் கூட்ட விவரங்களைத் தெரிவித்தல்.
  • வார்டின் முக்கியப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு முன்வைத்தல்.
  • வார்டு உறுப்பினர் அளித்த வாக்குறுதிகளைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: நகர்ப்புற வார்டுகளில் வசிப்பவர்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 வார்டுகளின் பிரச்சினைப் பட்டியல்.
லஞ்ச ஒழிப்பு & நேர்மைப் பொறுப்பாளர்Anti-Corruption Deskதிறந்துள்ளது

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்பட்டால், சட்டப்படி புகார் அளிக்க மக்களுக்கு வழிகாட்டுபவர்.

பணிகள்
  • லஞ்சம் கேட்கப்பட்ட அனுபவங்களை ரகசியமாகப் பதிவு செய்தல்.
  • லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் முறையை விளக்குதல்.
  • அலுவலகச் சேவைகளின் அரசுக் கட்டணம், காலக்கெடு விவரங்களை மக்களுக்குப் பகிர்தல்.
யார் பொருத்தம்: நேர்மைக்குப் பெயர் பெற்றவர்; சட்ட அறிவு உதவும்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: அரசு அலுவலகச் சேவைகளின் கட்டணம், காலக்கெடு விளக்கக் கையேடு.

மக்கள் சேவை

Citizen Service, 5 பொறுப்புகள்
ஊர் மக்கள் சேவை மையப் பொறுப்பாளர்Village Service Centre Leadதிறந்துள்ளது

மேலப்புதுக்குடி மக்கள் சேவை மையம் போல, தன் ஊரில் வாராந்திர உதவி மையம் நடத்துபவர்.

பணிகள்
  • வாரம் ஒரு நாள் நிலையான நேரத்தில் உதவி மையம் நடத்துதல்.
  • வரும் ஒவ்வொருவரின் கோரிக்கையையும் பதிவேட்டில் பதிவு செய்தல்.
  • தீர்வு கிடைக்கும் வரை பின்தொடர்ந்து மக்களுக்குத் தகவல் தெரிவித்தல்.
யார் பொருத்தம்: பொறுமையும் சேவை மனப்பான்மையும் உள்ளவர்.நேரம்: வாரம் 4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: ஒரு புதிய ஊரில் மையம் தொடக்கம்; 50 கோரிக்கைகள் பதிவு.
மனு எழுதுதல் & பின்தொடர்தல் பொறுப்பாளர்Petitions Leadதிறந்துள்ளது

மக்களின் பிரச்சினைகளுக்குச் சரியான அலுவலகத்திற்குச் சரியான மனு எழுதி, முடிவு வரை பின்தொடர்பவர்.

பணிகள்
  • ஆட்சியர் குறைதீர்க்கும் நாள், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்களை எழுதுதல்.
  • ஒவ்வொரு மனுவின் எண், தேதி, நிலையைப் பதிவேட்டில் பராமரித்தல்.
  • பதில் வராத மனுக்களுக்கு நினைவூட்டல் அனுப்புதல்.
யார் பொருத்தம்: தெளிவாகத் தமிழில் எழுதுபவர்.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 மனுக்களும் அவற்றின் நிலைப் பதிவேடும்.
இலவச சட்ட உதவி வழிகாட்டிFree Legal Aid Guideதிறந்துள்ளது

பட்டா, நிலம், குடும்பப் பிரச்சினைகளில் மக்களை இலவச சட்ட உதவி அமைப்புகளுடன் இணைப்பவர்.

பணிகள்
  • மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவியை அறிமுகப்படுத்துதல்.
  • சட்ட விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்தல்.
  • வழக்கறிஞர்களின் தன்னார்வ உதவியை ஒருங்கிணைத்தல்.
யார் பொருத்தம்: சட்டப் பட்டதாரி அல்லது சட்ட மாணவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: ஒரு சட்ட விழிப்புணர்வு முகாம்.
இ-சேவை & டிஜிட்டல் உதவிப் பொறுப்பாளர்e-Services Help Leadதிறந்துள்ளது

சான்றிதழ்கள், ஆன்லைன் அரசு விண்ணப்பங்களுக்கு மக்களுக்கு உதவுபவர்.

பணிகள்
  • வருமான, இருப்பிடச் சான்றிதழ்கள் போன்ற ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு உதவுதல்.
  • விண்ணப்ப நிலையைச் சரிபார்த்து மக்களுக்குத் தெரிவித்தல்.
  • முதியோருக்கு அலைபேசியில் அரசுச் சேவைகளைப் பயன்படுத்தக் கற்றுத் தருதல்.
யார் பொருத்தம்: கணினி அறிவுள்ள இளைஞர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 பேருக்கு ஆன்லைன் விண்ணப்ப உதவி.
மாற்றுத்திறனாளிகள் & முதியோர் நலப் பொறுப்பாளர்Disability & Elderly Welfare Leadதிறந்துள்ளது

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு அடையாள அட்டை, உதவித்தொகை, உதவிக் கருவிகள் பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • தகுதியுள்ளவர்களின் பட்டியல் தயாரித்தல்.
  • மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை (UDID), உதவித்தொகை, ஓய்வூதிய விண்ணப்ப உதவி.
  • உதவிக் கருவிகள் வழங்கும் முகாம்களை ஏற்பாடு செய்தல்.
யார் பொருத்தம்: சமூகப் பணி அல்லது சிறப்புக் கல்வி அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 30 பேருக்கு அட்டை அல்லது உதவித்தொகை விண்ணப்பம்.

சுகாதாரம்

Health, 4 பொறுப்புகள்
ஆரம்ப சுகாதார நிலையக் கண்காணிப்பாளர்Primary Health Centre Watchதிறந்துள்ளது

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவர் வருகை, மருந்து இருப்பு, வசதிகளைக் கண்காணிப்பவர்.

பணிகள்
  • மாதம் ஒருமுறை சுகாதார நிலையங்களைப் பார்வையிட்டு நிலை அறிக்கை தயாரித்தல்.
  • மருந்துத் தட்டுப்பாடு, மருத்துவர் காலியிடங்களை அதிகாரிகளிடம் கொண்டு செல்லுதல்.
  • 108 அவசர ஊர்தி தாமதப் புகார்களைப் பதிவு செய்தல்.
யார் பொருத்தம்: மருத்துவம், செவிலியர் அல்லது சுகாதாரப் பின்னணி.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: தொகுதியின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை அறிக்கை.
தாய்-சேய் நலக் காவலர்Mother & Child Health Guardianதிறந்துள்ளது

கர்ப்பிணிகளும் குழந்தைகளும் அரசுத் திட்டப் பலன்களையும் தடுப்பூசிகளையும் பெறுவதை உறுதி செய்பவர்.

பணிகள்
  • கர்ப்பிணிகள் மகப்பேறு உதவித் திட்டங்களில் பதிவு செய்ய உதவுதல்.
  • அங்கன்வாடி மையங்களின் நிலையைக் கண்காணித்தல்.
  • தடுப்பூசி, ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடத்துதல்.
யார் பொருத்தம்: செவிலியர், அங்கன்வாடி அல்லது சுகாதாரப் பணி அனுபவம்; பெண்கள் முன்னுரிமை.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 அங்கன்வாடி மையங்களின் நிலை அறிக்கை.
மருத்துவக் காப்பீட்டு வழிகாட்டிHealth Insurance Guideதிறந்துள்ளது

அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் குடும்பங்களைச் சேர்த்து, அவசரத்தில் பயன்பெற உதவுபவர்.

பணிகள்
  • காப்பீட்டு அட்டை இல்லாத குடும்பங்களைக் கண்டறிதல்.
  • அட்டை பெற விண்ணப்ப உதவி.
  • காப்பீட்டில் சிகிச்சை மறுக்கப்பட்டால் புகார் அளிக்க வழிகாட்டுதல்.
யார் பொருத்தம்: மருத்துவமனை அல்லது காப்பீட்டுத் துறை அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 குடும்பங்களுக்குக் காப்பீட்டு அட்டை.
போதைப் பழக்கத் தடுப்பு விழிப்புணர்வுப் பொறுப்பாளர்Anti-Addiction Awareness Leadதிறந்துள்ளது

இளைஞர்களிடையே மது, போதைப்பொருள் பழக்கத்தைத் தடுக்க விழிப்புணர்வும், மீட்புக்கு வழிகாட்டலும் செய்பவர்.

பணிகள்
  • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • குடும்பங்களை அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு மையங்களுடன் இணைத்தல்.
  • போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல் துறைக்குப் பாதுகாப்பாகத் தகவல் அளிக்க வழிகாட்டுதல்.
யார் பொருத்தம்: ஆலோசகர், ஆசிரியர் அல்லது சமூகப் பணி அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 பள்ளி அல்லது கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கல்வி & இளைஞர்

Education & Youth, 6 பொறுப்புகள்
அரசுப் பள்ளித் தரக் கூட்டாளர்Government School Partnerதிறந்துள்ளது

பெற்றோருடன் இணைந்து அரசுப் பள்ளிகளின் தேவைகளை அதிகாரிகளிடம் கொண்டு செல்பவர்.

பணிகள்
  • பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் பெற்றோர் பங்கேற்பை ஊக்குவித்தல்.
  • கழிப்பறை, குடிநீர், ஆசிரியர் காலியிடப் பிரச்சினைகளைப் பட்டியலிடுதல்.
  • கல்வித் துறையிடம் கோரிக்கை வைத்துப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்லது கல்விப் பின்னணி உள்ளவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 அரசுப் பள்ளிகளின் தேவைப் பட்டியல்.
உதவித்தொகை & உயர்கல்வி வழிகாட்டிScholarships & Higher Education Guideதிறந்துள்ளது

மாணவர்களுக்கு உதவித்தொகைகள், கல்லூரி சேர்க்கை, கல்விக் கடன் பெற வழிகாட்டுபவர்.

பணிகள்
  • அரசு, தனியார் உதவித்தொகைகளின் பட்டியலும் கடைசி தேதிகளும் பகிர்தல்.
  • 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடத்துதல்.
  • கல்விக் கடன் விண்ணப்பங்களுக்கு உதவுதல்.
யார் பொருத்தம்: பட்டதாரி; கல்வி ஆலோசனை அனுபவம் உதவும்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்ப உதவி.
போட்டித் தேர்வுப் பயிற்சி வட்டப் பொறுப்பாளர்Competitive Exam Study Circle Leadதிறந்துள்ளது

அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வட்டம் நடத்துபவர்.

பணிகள்
  • TNPSC, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு வாராந்திரப் படிப்பு வட்டம் நடத்துதல்.
  • மாதிரித் தேர்வுகள், பழைய வினாத்தாள்கள் பகிர்தல்.
  • தேர்வில் வெற்றி பெற்றவர்களை வழிகாட்டிகளாக இணைத்தல்.
யார் பொருத்தம்: போட்டித் தேர்வு அனுபவம் உள்ள பட்டதாரி.நேரம்: வாரம் 4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 30 மாணவர்களுடன் ஒரு படிப்பு வட்டம்.
வேலைவாய்ப்பு & திறன் பயிற்சிப் பொறுப்பாளர்Jobs & Skills Leadதிறந்துள்ளது

இளைஞர்களை வேலைவாய்ப்பு முகாம்கள், அரசுத் திறன் பயிற்சித் திட்டங்களுடன் இணைப்பவர்.

பணிகள்
  • வேலை தேடும் இளைஞர்களின் பட்டியலும் திறன்களும் பதிவு செய்தல்.
  • வேலைவாய்ப்பு முகாம்கள், பயிற்சித் திட்டங்களின் தகவல்களைப் பகிர்தல்.
  • உள்ளூர் நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்.
யார் பொருத்தம்: மனிதவளம், பயிற்சி அல்லது தொழில் அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 100 இளைஞர்களின் திறன் பதிவேடு; 10 பேருக்கு வேலை அல்லது பயிற்சி இணைப்பு.
இளைஞர் மன்றம் & விளையாட்டுப் பொறுப்பாளர்Youth Clubs & Sports Leadதிறந்துள்ளது

ஊர்தோறும் இளைஞர் மன்றம் அமைத்து, விளையாட்டு, தூய்மைப் பணிகளை நடத்துபவர்.

பணிகள்
  • இளைஞர் மன்றங்களை அமைத்து ஒருங்கிணைத்தல்.
  • விளையாட்டுப் போட்டிகள், உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்துதல்.
  • ஊர்த் தூய்மை, மரம் நடுதல் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துதல்.
யார் பொருத்தம்: விளையாட்டு வீரர், உடற்கல்வி அல்லது NSS / NCC அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 3 ஊர்களில் இளைஞர் மன்றம்.
நூலகம் & வாசிப்பு இயக்கப் பொறுப்பாளர்Library & Reading Leadதிறந்துள்ளது

ஊர்ப்புற நூலகங்களை மேம்படுத்தி, வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பவர்.

பணிகள்
  • நூலகங்களின் நிலை, புத்தகத் தேவைகளைப் பட்டியலிடுதல்.
  • புத்தக நன்கொடை இயக்கம் நடத்துதல்.
  • மாணவர்களுக்கு வாசிப்பு வட்டங்கள் நடத்துதல்.
யார் பொருத்தம்: ஆசிரியர், நூலகர் அல்லது வாசிப்பு ஆர்வலர்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 500 புத்தகங்கள் நன்கொடை; ஒரு வாசிப்பு வட்டம்.

மகளிர் & உள்ளூர்ப் பொருளாதாரம்

Women & Local Economy, 6 பொறுப்புகள்
மகளிர் சுய உதவிக் குழு இணைப்புப் பொறுப்பாளர்Self-Help Group Linkage Leadதிறந்துள்ளது

மகளிர் சுய உதவிக் குழுக்களை வங்கிக் கடன், அரசுத் தொழில் திட்டங்களுடன் இணைப்பவர்.

பணிகள்
  • தொகுதியின் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல்.
  • வங்கிக் கடன், தொழில் பயிற்சித் திட்டங்களின் தகவல் பகிர்தல்.
  • குழுப் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்புகளைத் தேடுதல்.
யார் பொருத்தம்: சுய உதவிக் குழு அல்லது வங்கி அனுபவமுள்ள பெண்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 குழுக்களுடன் தொடர்பு; 3 குழுக்களுக்குக் கடன் அல்லது பயிற்சி இணைப்பு.
மகளிர் பாதுகாப்பு வழிகாட்டிWomen's Safety Guideதிறந்துள்ளது

பெண்களுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தலில் அரசு உதவி அமைப்புகளை அணுக வழிகாட்டுபவர்.

பணிகள்
  • 181 மகளிர் உதவி எண், காவல் உதவி போன்றவற்றின் விவரங்களைப் பரப்புதல்.
  • பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre), சட்ட உதவியுடன் இணைத்தல்.
  • பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையை முழுமையாகக் காத்தல்.
யார் பொருத்தம்: பெண்கள்; சமூகப் பணி, ஆலோசனை அல்லது சட்ட அனுபவம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 ஊர்களில் உதவி எண் விழிப்புணர்வு.
பீடித் தொழிலாளர் நலப் பொறுப்பாளர்Beedi Workers' Welfare Leadதிறந்துள்ளது

பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு நல அட்டை, வருங்கால வைப்பு நிதி, கல்வி உதவித்தொகை போன்ற உரிமைகளைப் பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • நல அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கு விண்ணப்ப உதவி.
  • பீடித் தொழிலாளர்களுக்கான அரசு நலத்திட்டங்களின் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவிகளுக்கு வழிகாட்டுதல்.
  • வருங்கால வைப்பு நிதிக் கணக்குப் பிரச்சினைகளைப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: பீடித் தொழிலாளர் குடும்பங்களை நன்கு அறிந்தவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 தொழிலாளர்களின் உரிமைப் பதிவேடு.
தோட்டத் தொழிலாளர் நலப் பொறுப்பாளர்Plantation Workers' Welfare Leadதிறந்துள்ளது

மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வீடு, வேலை, மறுவாழ்வு உரிமைகளுக்குப் பணியாற்றுபவர்.

பணிகள்
  • தொழிலாளர் குடும்பங்களின் நிலையையும் தேவைகளையும் கணக்கெடுத்தல்.
  • வீட்டுமனை, மறுவாழ்வு, அரசுத் திட்ட விண்ணப்பங்களுக்கு உதவுதல்.
  • அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கைகளை ஆவணப்படுத்திப் பின்தொடர்தல்.
யார் பொருத்தம்: தோட்டத் தொழிலாளர் சமூகத்தை நன்கு அறிந்தவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: குடும்பங்களின் தேவைப் பதிவேடு.
குடிசைத் தொழில் & சிறு வணிகப் பொறுப்பாளர்Cottage Industry & Small Business Leadதிறந்துள்ளது

அப்பளம் போன்ற உள்ளூர்த் தொழில்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் கடன், பதிவு, சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருபவர்.

பணிகள்
  • சிறு தொழில்களின் பட்டியலையும் அவற்றின் தேவைகளையும் தொகுத்தல்.
  • உத்யம் (Udyam) பதிவு, முத்ரா கடன் போன்ற திட்டங்களுக்கு வழிகாட்டுதல்.
  • உள்ளூர்ப் பொருட்களுக்கு இணைய வழி விற்பனை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல்.
யார் பொருத்தம்: வணிகம், வங்கி அல்லது தொழில்முனைவு அனுபவம்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 சிறு தொழில்களுக்குப் பதிவு அல்லது கடன் வழிகாட்டல்.
சுற்றுலா & பாரம்பரியப் பொறுப்பாளர்Tourism & Heritage Leadதிறந்துள்ளது

பாபநாசம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்ற இடங்களின் தூய்மை, வசதி, உள்ளூர் வேலைவாய்ப்புக்குப் பணியாற்றுபவர்.

பணிகள்
  • சுற்றுலாத் தலங்களின் வசதிக் குறைபாடுகளைப் பட்டியலிடுதல்.
  • பாரம்பரியக் கோயில்கள், கட்டடங்கள், ஊர் வரலாற்றை ஆவணப்படுத்துதல்.
  • உள்ளூர் இளைஞர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டி வாய்ப்புகளை உருவாக்குதல்.
யார் பொருத்தம்: வரலாறு, சுற்றுலா அல்லது புகைப்பட ஆர்வம்.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 சுற்றுலாத் தலங்களின் வசதி அறிக்கை.

தேர்தல் தயார்நிலை

Election Preparedness, 6 பொறுப்புகள்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பொறுப்பாளர்Electoral Roll Leadதிறந்துள்ளது

தகுதியுள்ள ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் சரியாக இடம்பெறுவதை உறுதி செய்பவர்.

பணிகள்
  • 18 வயது நிரம்பியவர்களைப் படிவம் 6 மூலம் சேர்க்க உதவுதல்.
  • பெயர், முகவரித் திருத்தங்களுக்குப் படிவம் 8 விண்ணப்ப உதவி.
  • வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களுக்கு மக்களை அழைத்துச் செல்லுதல்.
யார் பொருத்தம்: கணினி அறிவும் களப்பணி ஆர்வமும் உள்ளவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம் (திருத்தக் காலத்தில் அதிகம்)முதல் 90 நாள் இலக்கு: 100 புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள்.
வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்Polling Booth Coordinatorதிறந்துள்ளது

ஒவ்வொரு வாக்குச்சாவடிப் பகுதியிலும் கட்சியின் குழுவை அமைத்து, தேர்தல் நாள் பணிகளைத் திட்டமிடுபவர்.

பணிகள்
  • வாக்குச்சாவடி வாரியாகத் தன்னார்வலர் குழுக்கள் அமைத்தல்.
  • வாக்குச்சாவடி முகவர்களுக்கு விதிமுறைப் பயிற்சி அளித்தல்.
  • ஒவ்வொரு பகுதியின் பிரச்சினைகளையும் வாக்காளர் தொடர்பையும் பதிவு செய்தல்.
யார் பொருத்தம்: ஒருங்கிணைப்புத் திறனும் பல ஊர்த் தொடர்பும் உள்ளவர்.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 வாக்குச்சாவடிகளுக்குக் குழுக்கள்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பயிற்சிப் பொறுப்பாளர்Local Body Candidate Training Leadதிறந்துள்ளது

ஊராட்சி, நகராட்சி வார்டுத் தேர்தல்களில் நிற்கவிருக்கும் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்.

பணிகள்
  • வேட்புமனு, தகுதிகள், செலவுக் கணக்கு விதிகள் குறித்துப் பயிற்சி.
  • பொது மேடையில் பேசுதல், வீடு வீடாகப் பிரச்சாரம் குறித்துப் பயிற்சி.
  • கட்சியின் உள்கட்சி வேட்பாளர் தேர்வு முறைக்கு வேட்பாளர்களைத் தயார் செய்தல்.
யார் பொருத்தம்: உள்ளாட்சி அனுபவம் அல்லது பயிற்றுநர் பின்னணி.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 20 வருங்கால வேட்பாளர்களுக்கு ஒரு பயிற்சி முகாம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர்Urban Local Body Election Leadதிறந்துள்ளது

நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கான கட்சியின் தேர்தல் தயாரிப்பை ஒருங்கிணைப்பவர்.

பணிகள்
  • வார்டு வாரியான பிரச்சினைப் பட்டியலும் தேர்தல் வாக்குறுதி வரைவும் தயாரித்தல்.
  • ஒவ்வொரு வார்டிலும் கட்சிக் குழு அமைத்தல்.
  • வேட்பாளர் தேர்வுக்கான உறுப்பினர் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்ய உதவுதல்.
யார் பொருத்தம்: நகர்ப்புற வார்டுகளை நன்கு அறிந்தவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 வார்டுகளின் பிரச்சினைப் பட்டியல்.
தேர்தல் விதிமுறை & செலவுக் கணக்குப் பொறுப்பாளர்Election Compliance Leadதிறந்துள்ளது

தேர்தல் நடத்தை விதிகள், அனுமதிகள், செலவுக் கணக்குகளைச் சரியாகக் கடைப்பிடிக்க உதவுபவர்.

பணிகள்
  • கூட்டம், ஊர்வலம், ஒலிபெருக்கிக்கான அனுமதிகளை முறைப்படி பெறுதல்.
  • வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைத் தினசரி பதிவு செய்ய உதவுதல்.
  • தேர்தல் அதிகாரிகளிடம் உரிய காலத்தில் கணக்குகளைச் சமர்ப்பிக்க உதவுதல்.
யார் பொருத்தம்: கணக்கியல் அல்லது சட்டப் பின்னணி.நேரம்: தேர்தல் காலத்தில் வாரம் 5 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: தேர்தல் விதிமுறைச் சரிபார்ப்புப் பட்டியல் தயாரிப்பு.
தரவு & கள ஆய்வுப் பொறுப்பாளர்Data & Field Survey Leadதிறந்துள்ளது

ஊர்வாரியான பிரச்சினைகளைக் கணக்கெடுத்து, தரவுகளின் அடிப்படையில் கட்சியின் திட்டங்களை வடிவமைக்க உதவுபவர்.

பணிகள்
  • ஊர்வாரியான பிரச்சினைக் கணக்கெடுப்புப் படிவம் வடிவமைத்தல்.
  • தரவுகளைத் தொகுத்து வரைபடம், அறிக்கையாக வெளியிடுதல்.
  • சாதி, மதம் போன்ற தகவல்களை ஒருபோதும் சேகரிக்காமல் இருப்பதை உறுதி செய்தல்.
யார் பொருத்தம்: புள்ளியியல், கணினி அல்லது ஆய்வுப் பின்னணி.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 ஊர்களின் பிரச்சினைக் கணக்கெடுப்பு அறிக்கை.

ஊடகம் & மக்கள் தொடர்பு

Media & Outreach, 4 பொறுப்புகள்
தொகுதி செய்தித் தொடர்பாளர்Constituency Spokespersonதிறந்துள்ளது

கட்சியின் நிலைப்பாடுகளை ஊடகங்களிடம் தெளிவாகவும் உண்மையாகவும் எடுத்துரைப்பவர்.

பணிகள்
  • பத்திரிகைச் செய்திக் குறிப்புகள் தயாரித்தல்.
  • உள்ளூர் செய்தியாளர்களுடன் தொடர்பு பராமரித்தல்.
  • தவறான தகவல்களுக்கு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தல்.
யார் பொருத்தம்: நல்ல தமிழ்ப் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் உள்ளவர்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 செய்திக் குறிப்புகள் வெளியீடு.
சமூக ஊடகப் பொறுப்பாளர்Social Media Leadதிறந்துள்ளது

கட்சியின் பணிகளை முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வழியாக மக்களிடம் கொண்டு செல்பவர்.

பணிகள்
  • வாரம் குறைந்தது 3 பதிவுகள் வெளியிடுதல்.
  • மக்களின் கருத்துகள், கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
  • உறுதி செய்யப்படாத தகவல்களைப் பகிராமல் இருத்தல்.
யார் பொருத்தம்: சமூக ஊடக அனுபவமுள்ள இளைஞர்.நேரம்: வாரம் 4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 1,000 புதிய பின்தொடர்பவர்கள்.
காணொளி & ஆவணப் பதிவுப் பொறுப்பாளர்Video & Documentation Leadதிறந்துள்ளது

கட்சியின் களப்பணிகளையும் மக்கள் பிரச்சினைகளையும் காணொளியாகவும் புகைப்படமாகவும் ஆவணப்படுத்துபவர்.

பணிகள்
  • ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புகைப்படம், காணொளியாகப் பதிவு செய்தல்.
  • யூடியூப் காணொளிகளுக்குத் தொகுப்புப் பணி.
  • கட்சியின் புகைப்படக் களஞ்சியத்தைப் பராமரித்தல்.
யார் பொருத்தம்: புகைப்படம், காணொளித் தொகுப்பு அனுபவம்.நேரம்: வாரம் 3–4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 10 களப்பணிக் காணொளிகள்.
நிகழ்ச்சி & தெருமுனைக் கூட்ட ஏற்பாட்டாளர்Events & Street Meetings Organiserதிறந்துள்ளது

கட்சிக் கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முறையான அனுமதியுடன் ஏற்பாடு செய்பவர்.

பணிகள்
  • காவல் துறை, உள்ளாட்சி அனுமதிகளைப் பெறுதல்.
  • இடம், ஒலிபெருக்கி, இருக்கை ஏற்பாடுகள் செய்தல்.
  • நிகழ்ச்சிக்குப் பின் இடத்தைச் சுத்தமாக ஒப்படைத்தல்.
யார் பொருத்தம்: ஏற்பாட்டுத் திறன் உள்ளவர்.நேரம்: வாரம் 2–3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 3 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

கட்சி அமைப்பு

Party Building, 6 பொறுப்புகள்
ஊர்க் கிளை அமைப்பாளர்Village Unit Builderதிறந்துள்ளது

ஒவ்வொரு ஊராட்சியிலும் வார்டிலும் குறைந்தது 5 உறுப்பினர்கள் கொண்ட கட்சிக் கிளையை அமைப்பவர்.

பணிகள்
  • ஊர்வாரியாக உறுப்பினர்களைக் கண்டறிந்து கிளை அமைத்தல்.
  • கிளைச் செயலாளர், பொருளாளர் தேர்தலுக்கு உதவுதல்.
  • கிளைகளின் மாதாந்திரக் கூட்டங்களை ஒருங்கிணைத்தல்.
யார் பொருத்தம்: பல ஊர்களில் தொடர்பு உள்ளவர்.நேரம்: வாரம் 4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 5 புதிய ஊர்க் கிளைகள்.
உறுப்பினர் சேர்க்கை & பதிவேட்டுப் பொறுப்பாளர்Membership Drive & Register Leadதிறந்துள்ளது

புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, உறுப்பினர் பதிவேட்டைச் சரியாகப் பராமரிப்பவர்.

பணிகள்
  • உறுப்பினர் படிவங்களைச் சரிபார்த்து வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுதல்.
  • தேர்தல் ஆணையப் பதிவுக்கான 130 உறுப்பினர் உறுதிமொழிப் பத்திரங்களை ஒருங்கிணைத்தல்.
  • ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரசீதும் அடையாள அட்டையும் வழங்குதல்.
யார் பொருத்தம்: ஆவணங்களை நுணுக்கமாகக் கையாள்பவர்; கணினி அறிவு.நேரம்: வாரம் 4 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 130 உறுதிமொழிப் பத்திரங்கள் முழுமை.
தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்Volunteer Coordinatorதிறந்துள்ளது

ஒவ்வொரு தன்னார்வலருக்கும் அவர் திறமைக்கேற்ற பணியும் பயிற்சியும் தருபவர்.

பணிகள்
  • தன்னார்வலர்களின் திறன், நேரப் பதிவேடு பராமரித்தல்.
  • இந்தப் பொறுப்புகளுக்குத் தகுந்தவர்களைக் கண்டறிந்து இணைத்தல்.
  • சிறந்த பணிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்.
யார் பொருத்தம்: மனிதவளம் அல்லது ஒருங்கிணைப்பு அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: 50 தன்னார்வலர்களின் திறன் பதிவேடு.
நிதி வெளிப்படைத்தன்மைப் பொறுப்பாளர்Funds Transparency Leadதிறந்துள்ளது

கட்சிக்கு வரும் ஒவ்வொரு நன்கொடையும் ரசீதுடன், விதிகளின்படி பெறப்பட்டு, வெளிப்படையாகக் கணக்குக் காட்டப்படுவதை உறுதி செய்பவர்.

பணிகள்
  • நன்கொடைகளுக்கு எண்ணிட்ட ரசீது வழங்குவதில் பொருளாளருக்கு உதவுதல்.
  • ஒருவரிடமிருந்து ஆண்டுக்கு ₹2,000-க்கு மேல் ரொக்கம் பெறாமல் இருப்பதைக் கண்காணித்தல்.
  • மாதாந்திர வரவு-செலவுச் சுருக்கத்தை மக்களுக்கு வெளியிடுதல்.
யார் பொருத்தம்: கணக்கியல் பின்னணி.நேரம்: வாரம் 2 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: முதல் மாதாந்திரக் கணக்கு வெளியீடு.
தலைமை அலுவலக நிர்வாகப் பொறுப்பாளர்Head Office Managerதிறந்துள்ளது

கங்கணாங்குளம் தலைமை அலுவலகம் அறிவிக்கப்பட்ட நேரங்களில் திறந்து முறையாக இயங்குவதை உறுதி செய்பவர்.

பணிகள்
  • அலுவலக நேரங்களை அறிவித்து, அந்நேரங்களில் அலுவலகத்தைத் திறந்து வைத்தல்.
  • வருகையாளர் பதிவேடு, கடிதப் பதிவேடு பராமரித்தல்.
  • அதிகாரிகள் சரிபார்க்க வரும்போது தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்தல்.
யார் பொருத்தம்: நம்பகமானவர்; அலுவலகத்திற்கு அருகில் வசிப்பவர்.நேரம்: வாரம் 6 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: அலுவலக நேரப் பலகையும் பதிவேடுகளும் தொடக்கம்.
நல்லாட்சி செயலி & தரவுப் பாதுகாப்புப் பொறுப்பாளர்Nallaatchi App & Data Protection Leadதிறந்துள்ளது

கட்சியின் இணையதளம், செயலி, உறுப்பினர் தரவுகளைப் பாதுகாப்பாகப் பராமரிப்பவர்.

பணிகள்
  • இணையதளம், செயலியின் புதுப்பிப்புகளைக் கவனித்தல்.
  • உறுப்பினர் தகவல்களுக்கு இருநிலைச் சரிபார்ப்பு, கடவுச்சொல் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • தரவுப் பாதுகாப்புச் சட்டப்படி தனிப்பட்ட தகவல்களைக் கையாளுதல்.
யார் பொருத்தம்: கணினி அறிவியல் அல்லது IT அனுபவம்.நேரம்: வாரம் 3 மணி நேரம்முதல் 90 நாள் இலக்கு: இணையதளத் திருத்தங்களும் தரவுப் பாதுகாப்புச் சரிபார்ப்புப் பட்டியலும்.

இந்தத் தேடலுக்குப் பொறுப்பு இல்லை. வேறு சொல்லில் தேடுங்கள், அல்லது "அனைத்தும்" என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இது தொடக்கம் மட்டுமே. ஒவ்வொரு ஊராட்சியின் பிரச்சினைகளுக்கு ஏற்ப மேலும் பொறுப்புகள் சேர்க்கப்படும். மாநில நிர்வாகிகள் பற்றி தலைமை பக்கத்தில்.